நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்றில் அடுத்த வாரத்தின் செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நியமிக்கப்படவுள்ள கோப் மற்றும் கோபா உள்ளிட்ட குழுக்களை அமைப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் கட்சித்தலைவர்கள் கூட்டமும் காலை இடமபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நிறுவப்பட்ட தேசிய பேரவைக் குழு நாளை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

அந்த சபைக்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

September 28, 2022, 6:25 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X