கருத்து வேறுபாடுகள் அமைதியானதாகவும் , ஜனநாயக வெளிக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது அமர்வின் போது தெரிவித்துள்ளார் .

தொடர்ந்தும், அண்மைய வாரங்களில் இலங்கை எதிர்கொள்ளும் பாரதூரமான சமூக மற்றும் பொருளாதார நிலைமையை சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளது .தொற்றுநோய் உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளால் இந்த நிலைமை மோசமாகிவிட்டாலும் போராட்டங்களின் கவனம் பொருளாதார நிவாரணம் மற்றும்  நிறுவன சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை உள்ளடக்கியது .

இந்தச் சவால்களை அங்கீகரித்து , அனைவரையும் உள்ளடக்கிய முறையில் முன்னோக்கிச் செல்வதில் நமது மக்களின் அனைத்துப் பிரிவுகளின் குறிப்பாக , இளைஞர்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்ப்பது மிகவும் முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம் .

எதிர்காலத்திற்கான அடிப்படையிலான நிலையான அரசாங்கத்தின் அடித்தளமாக , பரந்த தேசிய ஊடாக  பிரச்சினைகளுக்கு ஒருமித்த அணுகுமுறையை ஜனாதிபதியும் பிரதமரும் கோரியுள்ளனர் . புதிய பிரதமரின் நியமனம் மற்றும் பல கட்சிகளை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையின் நியமனம் ஆகியவற்றுடன் அரசியல் மாற்றங்கள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

June 14, 2022, 7:41 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X