சீன விண்வெளி ஓடம் ஒன்றின் சிதைவுகள், இந்து – பசுபிக் சமுத்திரங்களை அண்டிய பகுதிகளில் பூமியில் விழுந்ததாக அமெரிக்க மற்றும் சீன விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.

லோங் மார்ச் 5 என்ற இந்த விண்வெளி ஓடத்தின் (ரொக்கட்) பெரும்பாலான எச்சங்கள் வளிமண்டலத்தில் எரிந்துவிட்டதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த சிதைவுகள் எந்த பாகங்களில் வீழ்ந்துள்ளன என்பது தொடர்பில் சீனா தகவல்களை பரிமாறவில்லை என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

முன்னதாக, இந்த விண்வெளி ஓடத்தின் எச்சங்கள், மக்கள் வசிக்கும் பகுதியில் விழுவதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு என்று விண்வெளி நிபுணர்கள் கூறியிருந்தனர்.

July 31, 2022, 11:21 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X