கல்கிஸை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை – அத்திடிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் படி, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்த 15 கிராம் 200 மில்லிகிராம் கொக்கேய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் அத்திடிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை இன்று கல்கிஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

August 13, 2022, 4:16 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X