கல்பிட்டி நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நுரைச்சோலை – கல்பிட்டிய வீதி, நாவற்காடு சந்திக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இருவரும், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

June 20, 2022, 11:24 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X