களனி – பட்டிய சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் 53,000 ரூபா பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி பட்டிய சந்தி பகுதியில் நபர் ஒருவரை கொலை செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் வவுனியா மற்றும் கிருலப்பனை பகுதிகளைச் சேர்ந்த 39 மற்றும் 42 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளது.

September 23, 2022, 9:57 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X