ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகிபுரம் 01 பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இரண்டு வீடுகள் மீது காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, வீடொன்றில் இருந்த கந்தையா சோபனா என்ற 32 வயதுடைய பெண் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

November 10, 2022, 12:58 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X