கொவிட் வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனினும் நமது நாட்டினுள் புதிய வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில்; குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் டீயு 5 என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸை மிகுந்த அவதானத்துடன் பரிசோதித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த புதிய வைரஸ் 63 நாடுகளில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் ஏனைய வைரஸ்களை விட வேகமாகப் பரவுகிறது என்றும், முந்தைய கொவிட் வைரஸின் திரிபுகளை விட அதிகமாகப் பரவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் விஞ்ஞானிகள் இன்னும் வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

June 27, 2022, 12:58 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X