15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் நேற்று பாடசாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்துள்ளார்.

பாடசாலை அருகே குளிக்கச் சென்ற போது சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிணற்றில் தவறி விழுந்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த முகமதியா நகரு என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

November 3, 2022, 12:21 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X