குரங்கு அம்மை நோய்க்கு (Monkeypox) உலக சுகாதார அமைப்பு mpox என புதிய பெயர் சூட்டியுள்ளது.

தொடக்கத்தில் குரங்குகள் இடையே பரவிய அந்த நோய், தற்போது மனிதா்களிடையே பரவி வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை அதிகமாக பரவும் நிலையில், குரங்கு அம்மை என்ற பெயா் கறுப்பினத்தவா்களை இழிவுபடுத்தக்கூடும் என்பதால், mpox என புதிய பெயா் வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குரங்கு அம்மை என்ற பெயரின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

X