தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர திஸாநாயக்க குவைத் சென்றுள்ளார்.

குவைட்டில் உள்ள இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள “தீர்வுக்கான மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் குவைத் இலங்கை ஒன்றுகூடல் “என பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாடு இன்று குவைத்தின் ஃபர்வானியாவில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் 2.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குவைத் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்கவை அங்குள்ள இலங்கையர்கள் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.

November 11, 2022, 10:54 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X