கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 240 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கொக்கெய்ன் போதைப் பொருளுடன் போலந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 கிலோவுக்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப் பொருளை இலங்கை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொலம்பியாவில் இருந்து கட்டார் ஊடாக அவர் நாட்டிற்கு வந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

August 17, 2022, 12:25 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X