கொழும்பின் பல பகுதிகளில் நாளை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளை (02) இரவு 10.00 மணி முதல் சனிக்கிழமை (03) பிற்பகல் 1.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலே எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடைய புதிய மின் விநியோகக் குழாய்கள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

X