கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணும் அவரது 18 வயது மகனும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் காயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

October 21, 2022, 10:31 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X