றாகம புகையிரத நிலையத்தின் டிக்கட் கவுன்டரில் கடமையாற்றும் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்று காலை டிக்கட் கவுன்டர்கள் மூடப்பட்டதாக இலங்கை புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத நிலையத்தில் பணியாற்றும் பல ஊழியர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால், புகையிரத நிலையத்திலுள்ள டிக்கெட் கவுன்டர்கள் மூடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

நிலையத்தில் கடமைகளை ஈடுசெய்வதற்காக மேலதிக உத்தியோகத்தர்கள் இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

July 28, 2022, 12:53 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X