சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து விற்பனை செய்த நபர்களை அடையாளம் காண நேற்று பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 2,465 லீற்றர் எரிபொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது 400 லீற்றர் பெற்றோல் மற்றும் 2,065 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதாகவும், அதில் 1,660 லீற்றர் டீசல் மேல் மாகாணத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த சில வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட 1,489 சுற்றிவளைப்புகளின் போது 1,439 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 63,812 லீற்றர் பெற்றோல், 198,962 லீற்றர் டீசல் மற்றும் 22,744 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

August 30, 2022, 4:34 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X