சட்டவிரோதமான முறையில் நாட்டின் கடல் எல்லையை மீறி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, அவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய படகும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கைதானவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

July 4, 2022, 8:33 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X