சவூதி அரேபியாவின் 92 வது தேசிய தினம் நேற்று இரவு கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் வெகு விமா்சையாக நடைபெற்றது.

கடந்த வாரம் புதிய தூதுவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் தூதுவா் கடிதத்தினை பொறுப்பேற்ற காலித் ஹமவுட், நசாா் அல்சான் அல் ஹட்டானி அவா்கள் தலைமையில் தேசிய சுதந்திர தினம் கொழும்பில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதமர் தினேஸ் குணவா்த்தன, சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தன, நீதியமைச்சா் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, சுற்றாடல் அமைச்சா் ஹாபீஸ் நசீர் அஹமட், சுகாதார அமைச்சா் கேஹெலிய ரம்புக்வெல, கலகெட அத்தே ஞான சாரத் தேரா், கலாநிதி கிரிந்த அஸ்சாச் தேரா், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சா் மனுச நானயக்கார, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவா் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் நாடுகளின் துாதுவா்கள், அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

அத்துடன் சவூதி தேசிய கீதம், சவூதி கலாச்சார நிகழ்வுகளும் திரை வழியாக காட்சிப்படுத்தப்பட்டதுடன் தேசிய தின கேக் சவூதி தூதுவருடன் இணைந்து அதிதிகள் பகிா்ந்து கொண்டனா்.

September 24, 2022, 12:06 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X