சீன இராணுவ கப்பல் விடயத்தை வெளிவிவகார அமைச்சு கையாண்டமை தொடர்பில் பல கவலைகள் எழுந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜூன் 28 ஆம் திகதி கப்பலை அனுமதிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஜூலை 12 ஆம் திகதி ஒப்புதல் வழங்கப்பட்டது என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இருப்பினும் ஜூலை 14 அன்று வெளிவிவகார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கப்பலின் பயணம் குறித்து அமைச்சர் அறிந்திருக்கவில்லையா என்றும் கேள்வியெழுப்பினார்.

ஓகஸ்ட் 8 ஆம் திகதி கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

கப்பல் வருவதற்கு மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் கப்பலுக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சீனக் கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் போது, ​​கப்பலில் உள்ள ஊழியர்களுக்கான உணவுத் தேவை குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

ஏனைய நாடுகளின் கப்பல்களில் செல்வாக்கு செலுத்தி இலங்கை அதிகாரிகள் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டினார்.

August 10, 2022, 5:00 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X