சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளது.

இலங்கை விமான சேவை அதிகமான தடவைகள் சீனாவிற்கு விமான சேவைகளை இயக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் மற்றும் வழங்க எதிர்பார்க்கப்படும் பொருளாதார , மனிதாபிமான உதவிகள் தொடர்பில் தூதுவர் ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளித்துள்ளார்..

அத்தோடு சீனாவில் கல்வி கற்கும் இலங்கை மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேசேளை இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

June 22, 2022, 9:29 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X