ஜனாதிபதி சத்தியப் பிரமாணம் செய்யும் போது நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

8 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்கும் விழாவை சுயாதீன தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பவும், ஏனைய தொலைக்காட்சிகள் மூலம் ஒரே நேரத்தில் ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி சிவப்புக் கம்பளத்தினூடாக நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததும் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டால் இரண்டு நிமிடங்களுக்குள் மின்பிறப்பாக்கிகள் தானாக இயங்குவது வழக்கம் எனவும், ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது சுமார் பத்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, தொலைக்காட்சி அலைவரிசைகளால் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாமல் போயிருந்தது.

இந்த நிலையில், இது நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் நாடாளுமன்ற காவல்துறையின் இது தொடர்பில்  குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடளித்துள்ளனர்.


July 21, 2022, 2:05 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X