கடந்த ஜூலையில் மக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது. இந்த செலவுகளில் கட்டடத்தின் பழுதுகளும் அடங்கும்.

எவ்வாறாயினும், அந்த அறிக்கையில் மாளிகையின் மரத்தளபாடங்கள், வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை.

இந்த திருத்தப்பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

October 30, 2022, 11:17 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X