கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது.

இதனையடுத்து, பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு அமைச்சின் பாதுகாப்பு செயலாளர் எஸ்.டி.கொடிகார தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரினால் வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஒரு கிலோ மாவின் விலையை 250 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக குறைத்தால், பாணின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 

 

October 25, 2022, 5:19 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X