எதிர்வரும் 25ஆம் திகதி விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 43,000க்கும் அதிகமான டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 8,000க்கும் அதிகமான டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதி அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் குறைந்தது ஒரு மணித்தியாலம் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கான ஒதுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

July 21, 2022, 4:10 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X