எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் டீசல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டினை வந்தடையும் என  மின்சக்தி மற்றும் எரிசக்தி  அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

ஒருதொகை பெற்றோலினை நாட்டிற்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . அத்துடன் , நாட்டில் தற்போது தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

இதேவேளை நேற்றைய தினமும்  , எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தமையினையும்,        இன்றைய தினமும் நள்ளிரவு முதலே எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் வரிசைகளில் காத்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது .

June 14, 2022, 7:50 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X