இன்று முதல் தனியார் பேருந்துகள் வழமை போன்று போக்குவரத்து சேவையில் ஈடுபடும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் பேருந்துகளுக்கு தற்போது எரிபொருள் போதியளவு கிடைக்கின்றது. எனவே எதிர்காலத்தில் எதுவித தடையும் இன்றி தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த நாட்களில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் 50 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

September 5, 2022, 11:18 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X