நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் நாடு முழுவதும் தனியார் பஸ் சேவை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பொது போக்குவரத்து சேவையை தொடர்ந்து கொண்டு செல்லும் நோக்கில் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் ஊடாக எரிபொருளை வழங்குமாறு அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவுறுத்தியது.

எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் சில பிரதேச டிப்போக்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்படுவதோடு சில இடங்களில் எரிபொருள் வழங்க மறுக்கப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவித்து;ளளது.

எனினும் முழுமையான அளவில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சகல புகையிரத சேவைகளுக்குமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

July 4, 2022, 7:57 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X