சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் தம்மிக்க பெரேரா இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதவிப் பிரமாணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அவர் இன்று காலை 10 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிற்கு பதிலாக தம்மிக்க பெரேரா தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தமை கு’றிப்பிடத்தக்கது.

June 21, 2022, 7:25 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X