தரமற்ற உரத்தை விநியோகித்த 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் எம் ஓ பி என்ற உரத்துடன், மண் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை கலவை செய்து விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களால் விநியோகத்திற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 38 ஆயிரத்து 650 கிலோகிராம் தரமற்ற உரம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட உரச்செயலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

November 25, 2022, 10:00 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X