தற்போதைய அரசாங்கம் நாட்டை தற்போது ஒரு சோகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற திட்டங்கள் மூலம் முழு நாடும் அகதியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு ஜனநாயக, சுதந்திர மற்றும் வெளிப்படையான மக்கள் போராட்டமே சிறந்த வழி என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் உண்மை நிலவரத்தை உணர்ந்து மக்களுக்குச் சாதகமான வகையில் தமது வேலைத்திட்டங்களை மாற்றியமைக்க நினைத்தாலும் அது போல எதுவும் நடக்கவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

June 26, 2022, 8:17 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X