ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் பிளவுகள் ஏற்பட வேண்டும் என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு எந்தவொரு குழப்பமும் எங்களுக்குள் இல்லை. கூட்டணியாக இருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை பல தசாப்தங்களுக்கு முன்னர் வெள்ளையர்கள் எம்மை ஆண்டனர். அந்த மண்ணில் தெற்காசிய நாட்டவர் ஒருவர் வெள்ளையர்களை ஆள்வது மகிழ்ச்சி என்று தெரிவித்த அவர் எதிர்காலத்தில் இலங்கையிலும் இளம் ஜனாதிபதி ஒருவர் தெரிவாக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 

 

October 25, 2022, 5:11 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X