கொழும்பு தாமரைக் கோபுரத்தை பார்வையிட நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நாள் ஒன்றுக்கு 1400 முதல் 2000 பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது மக்கள் ரூ.500 மற்றும் ரூ.2,000 கட்டணங்களில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் 200 ரூபாயெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டினருக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் 20 அமெரிக்க டொலராகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் மக்கள் தாமரைக் கோபுரத்தை பார்வையிடலாம்.

கொழும்பு தாமரைக் கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

September 15, 2022, 5:03 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X