நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட பஸ் பயண கட்டணங்கள் இன்று வெளியிடப்படவுள்ளது.
புதிய பஸ் கட்டணங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம மற்றும் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா ஆகியோர் இன்று அறிவிக்கவுள்ளனர்.
அண்மைய எரிபொருள் விலைத் திருத்தம் காரணமாக 30 சதவீத பஸ்; கட்டண உயர்வு தேவைப்படுவதாக பஸ் சங்கங்கள் அறிவித்தன.
மேலும் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

June 30, 2022, 9:35 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X