ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜயரத்ன மாவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் இளைஞர் ஒருவர் தொடருந்தில் மோதி உயிரிழந்தார்.

காலியில் இருந்து அம்பலாங்கொடை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்ட இளைஞர் பலத்த காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணித்தார்.

கம்மத்தேகொட, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

October 4, 2022, 1:14 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X