தொடருந்து நிலைய அதிபர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தொடருந்து திணைக்களத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று பிற்பகல் வரை, தொடருந்து பயணச்சீட்டு வழங்கும் செயற்பாட்டிலிருந்து விலகியிருந்த போதிலும், தொடருந்து சேவைகள் முன்னெடுக்ககப்பட்டன.

அந்தத் திணைக்களத்திடம் வினவியபோது, ​​தொடருந்து நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும், சில நிலையங்களில் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பின் போது தொடருந்து திணைக்களத்திற்கு நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு தமது தொழிற்சங்கம் பொறுப்பேற்காது என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

July 25, 2022, 3:05 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X