நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியிறக்கம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றதையடுத்து ஆலய மஹோற்சவம் நிறைவு பெற்றுள்ளது.

மேற்படி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 02 ஆம் திகதி கொடியேற்றதத்துடன் ஆரம்பமான நிலையில் நல்லைக்கந்தனின் தீர்த்தோற்சவம் நேற்றுக் காலை இடம்பெற்றது.

இதையடுத்து மாலை கொடியிறக்க உற்சவம் இடம்பெற்றதையடுத்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சண்டேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி வலம் வந்தனர்.

இதேவேளை இன்று சனிக்கிழமை மாலை பூங்காவனமும் நாளை ஞாயிற்றுக்கிழமை வைரவர் உற்சவமும் இடம்பெறவுள்ளது.

August 27, 2022, 10:59 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X