நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் 8ஆம் திகதி வரை விடுமுறை வழக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த வாரத்தை பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன் நேற்று ணுழழஅ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது தொடர்பாக குறித்த விசேட கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.

இதன்போதே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறையை மற்றுமொரு விடுமுறை காலத்தில் ஈடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

July 4, 2022, 7:51 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X