நாடாளுமன்றத்திற்குள் ஒரு சட்டமும் நாட்டு மக்களுக்கு வேறு சட்டமும் நடைமுறையில் உள்ளதா என்பதை சபாநாயகர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

நாடாளுமன்றில் இன்று நாடாளுமன்றத்திலும், சபாபீடத்திலும் பொதுச் சொத்துச் சட்டம் செல்லாது என்ற தவறான கருத்து நேற்று அமைச்சர் தெரிவித்ததாக சுட்டிக்காட்டினார்.

குற்றவியல் சட்டம் இந்த சபையில் செல்லுப்படியாகாதா என்பதை சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள அதிகாரங்கள் குறித்து நாட்டையே தவறாக வழிநடத்தும் சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

சொத்து சேதம் மற்றும் நாடாளுமன்றம் தொடர்பான ஏனைய சம்பவங்கள் தொடர்பில் நாட்டின் வழமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என பந்துல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

August 10, 2022, 1:18 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X