நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

றாகம பகுதியில் ஊடகண்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது என்றும் மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது என்றும் கேள்வியெழுப்பினார்.

இந்த முட்டாள்தனமாக தீர்மானத்தை எடுத்து இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்;;.

அதன் அடிப்படையில் 2, 3 ஆண்டுகளில் நாட்டை முழுமையாக கையேந்தும் நிலைக்கு கொண்டுசென்றவர்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமாயின் மீளப்பெற வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் வலியுறுத்தி உள்ளார.

June 25, 2022, 7:13 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X