நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் நாட்டிற்கு வருகைத்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வேகமாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவலடைவதற்கு முன்பாக 28 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டில் இருந்து வெளியேறியதுடன் தொற்றுப்பரவலின் பின்னர் நாட்டிற்கு வருகைதரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய சூழ்நிலையில், நாட்டிலிருந்து வெளியேறுபவர்கள் மற்றும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைவடைந்துள்ளது.

இதேவேளை, இந்த மாதத்தின் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20 ஆயிரத்து 535 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

June 24, 2022, 7:33 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X