நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தனியார் பேருந்து போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைய ஆரம்பித்துள்ளன.

நெருக்கடி நிலை நீடிக்குமாக இருந்தால் எதிர்வரும் நாட்களில் அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் இருந்து விலகக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிக்கும் நிலைக்கு செல்லும் என அரச தாதியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை போதுமான பெற்றோல் கிடைக்காமையினால் முச்சக்கரவண்டி சாரதிகளும் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் உணவு விநியோக சேவைகளும் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.

June 18, 2022, 8:20 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X