நாட்டில் அண்மைக்காலமாக மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டில் பொது மக்களின் வருமானம் குறைந்தமை காரணமாக மதுபானத்துக்கான தேவை 30 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

அரச நிதி பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூடியபோதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

விசேடமாக அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஒன்லைன் முறையின் கீழ் சில நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதற்கமைய, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குறித்த கூட்டத்திவ் கலந்துகொண்டனர்.

மதுவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை அடைவதில் சிக்கல்கள் சில காணப்பட்டதாகவும், மதுபான உற்பத்திக்கான எதனோல் குறைந்தமை, டீசல் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் இதற்குக் காரணமாக அமைந்தது எனவும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், மதுபானத்தின் விலை அதிகரிப்பு, பொது மக்களுக்குக் காணப்படும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மதுபானத்துக்கான தேவை 30 சதவீதத்தினால் குறைவடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

June 23, 2022, 7:23 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X