நாளாந்த எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறு இருக்க சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட மோசடிகள் காரணமாக அமைதியற்ற நிலைமை ஏற்பட்டிருந்தன.

எரிபொருள் கோரி வீதி மறியல் போராட்டமும் சில பகுதிகளில் இடம்பெற்று வருகிறது.

இந்தியக் கடனுதவின் கீழ் இலங்கை வந்துள்ள இறுதி டீசல் கப்பலில் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இறக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதனிடையே, சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறாமையினால் பொதுமக்கள் தொடர்ந்தும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் வணிகத் தேவைகளுக்காக மட்டுமே இறுதியாக வந்த கப்பலில் இருந்து இறக்கப்பட்ட எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

June 18, 2022, 8:22 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X