இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நாளைய போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன இடம்பெறவில்லை என இலங்கை தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க நேற்று  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒழுக்காற்று பிரச்சினை காரணமாக சாமிக்க கருணாரத்னவை அணியில் இருந்து நீக்குவதற்கு இலங்கை தெரிவுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

November 24, 2022, 4:38 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X