அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள பாரிய போராட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பங்கேற்கவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு நிச்சயம் ஆதரவு வழங்குவோம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜபக்ச குடும்ப ஆட்சி மற்றும் ஐ.தே.க. ஆட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து புதிய அரசாங்கத்தை அமைக்க கட்சி செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

உருவாக்கப்படும் புதிய அரசாங்கம், ஊழலற்ற மக்கள் எதிர்பார்க்கும் அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

November 1, 2022, 5:37 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X