இலங்கையின் இரண்டு பிரதான அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பணத்தை வழங்க மறுத்ததன் காரணமாக அடுத்த வாரம் முதல் நெல் கொள்வனவை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த வாரம் அரிசியின் விலையை குறைப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த காலங்களில் தொழிலதிபர்களுக்கு விரும்பிய வகையில் கடன் வழங்கியதால், இந்த இரண்டு வங்கிகளும் பணத்தட்டுப்பாட்டால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

September 8, 2022, 10:53 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X