தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனியும் ஆட்சியில் இருக்க அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கொழும்பு பேராயர், நாடு முழுமையான பொருளாதார வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவுகள் மக்களை இருண்ட படுகுழியில் தள்ளியுள்ளது என்றும், அதனை வார்த்தைகளால் விபரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமரின் நியமனத்துடன் சிறந்த எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் மீண்டும் கிளர்ந்தெழுந்த நிலையில், தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக பலர் மௌனம் காத்தனர்.

எனினும், மக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய அவல நிலை மிகவும் மோசமாகவும் தாங்க முடியாத வேதனையாகவும் மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் மேலும் துன்பத்தை ஏற்படுத்தாமல் அதிகாரத்தை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

July 6, 2022, 8:47 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X