டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகளுக்கு போக்குவரத்து காரணங்களால் சமூகமளிக்க முடியாத நிலைமைகள் குறித்த முறைபாடுகள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் அது குறித்து போக்குவரத்துசபை உள்ளிட்ட தரப்புடன் கலந்துரையாடி அந்த பிரச்சினையைத் தீர்த்து, வாராந்தம் 05 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

August 17, 2022, 12:54 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X