பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சு பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

டொலர்களை உள்ளீர்ப்பதற்கான உரிய வேலைத்திட்டம் பிரதமரிடம் இல்லை எனவும், நிதி அமைச்சராக அவர் முன்னெடுக்கும் அரசியல் விளையாட்டும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

டொலர்களை திரட்டுவதற்கான வழிமுறைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தடுத்து வருகின்றார் எனவும், நாட்டு மக்களை பட்டினியில் இருந்து மீட்பதற்கான திட்டமும் அவரிடம் இல்லையெனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பிரச்சினைகளுக்கு மத்தியில் பயணிக்காமல், நிதி அமைச்சு பதவியை ரணில் விக்கிரமசிங்க துறக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டமானது, நாட்டுக்கு டொலர்களை திரட்டுவதற்கான வழிமுறைகளை காண்பிக்கும் போராட்டமாக அமைய வேண்டும் எனவும் அவர் யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

July 7, 2022, 9:14 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X