எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் இரு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளனர்.

இதில், 5 வயதான மகள் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

32 வயதான தாயும், 11 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதான சிறுமி உயிரிழந்துள்ளதாகவம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மகனின் உடல்நிலை ஆபத்தானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

July 1, 2022, 7:33 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X